ஆனந்தமாய் வாழ ஆசையா? * பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்

யாருக்குத்தான் ஆனந்தமாய் வாழ ஆசை இருக்காது? ஆனால் எப்படிஆனந்தமாய் வாழ்வது என்பதுதான் தெரியவில்லை. ஆனந்தம் ஆர்ப்பரிக்கும் நிமிடங்களை விட்டுவிட்டுக் கவலைகளின் சவலைப் பிள்ளைகளாய் ஏன் வருத்தத்தின் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருக்கிறோமே ஏன்? · தங்கக் கடைகளிலும் குழந்தைகள் தேடுவது சாதாரண பலூன்களைத்தான். நிம்மதியான மனமே ஆனந்தத்தின் சந்நிதி; ஆனந்தமனம் இறைவன் உறையும் அரூபபீடம். இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்க நாமொன்றும் கடிகாரமுட்களன்று மனிதர்கள் என்பதை மறவாமலிருப்போம். · வாழ்க்கை என்பது வரமா? சாபமா? என்ற வினாக்கள் வேறு.சீக்குப் பிடித்த சிந்தனைகளின் போக்குப் பிடிக்காமல் தூரநின்று ரசித்துப் பாருங்கள் வாழ்க்கை எவ்வளவு அழகான வரமென்று புரியும். · “செல்வம் என்பது சிந...