உலகெங்கும் தமிழ் ஒலிக்க வேண்டும்
முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்கவேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் நிறைவேற்றி வருகிறார்கள் என்பதை அரவிந்தனின் “ தமிழுக்கு ஓர் இருக்கை” கட்டுரை உணர்த்தியது.ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க அரும்பாடுபட்டுவரும் ஜானகிராமன்,சம்பந்தன் இருவரையும் அவர்கள் ஆற்றிவரும் அரும்பணிகளோடு கட்டுரையாளர் சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார். உணர்ச்சிக் கோஷங்களைத் தாண்டி ஆயிரமாயிரம் புலம்பெயர்ந்த தமிழர்கள் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு,கோவில் ஆய்வுகள்,பண்பாட்டு ஆய்வுகள்,நாட்டார் வழக்காற்று ஆய்வுகள் ஆகியவற்றை முறையாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பது நமக்குத் தெளிவாகப் புலனாகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வுமாணவி ஆண்ட்ரியா குட்டியர்ஸ் திருச்சியில் தங்கி தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை களஆய்வு செய்துவருகிறார். மலேயாப் பல்ககலைக் கழகம் ஒருங்கிணைத்து நடத்திய ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டிற்கு...