Posts

Showing posts with the label மாற்றுத்திறனாளிகள் சேவை

இப்படியும் ஒரு மாமனிதர்ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவனர் திரு.இராமகிருஷ்ணன்

Image
தன்னிடம் இருப்பதைத் தருவதன்று தானம்,தன்னையே தருவதுதான் தானம்.மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்காகத் தன்னையே தந்த உயர்ந்த மனிதர் ஆயக்குடி அமர்சேவா சங்க நிறுவனர் திரு.இராமகிருஷ்ணன் அவர்கள்.வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள்,அவர் நம்பிக்கையின் வாழ்ந்துகாட்டி. சமூக சேவகர் திரு.பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள்தான் இராமகிருஷ்ணன் குறித்து எனக்குச் சொன்னவர்.1997 இல் எம்.ஏ மாணவனாய் பயின்றபோது பாலம் பாலம் கல்யாணசுந்தரம் அவர்களின் வாழக்கை வரலாற்றினை எழுதினேன்.அவர் விதைத்த விதைதான் சேவைநிறுவனங்களை நோக்கி வாழ்வைத் திருப்பியது.ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது “ குற்றாலத்திலிருந்து பத்துகிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் ஆய்க்குடி, அங்கே இராமகிருஷ்ணன் என்கிற ஒப்பற்ற மனிதர் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்குப் பாதுகாவலராக இருந்துகொண்டிருக்கிறார்.நான்காமாண்டு பொறியியல் பட்டப்படிப்புப் பயிலும்போது அவர் கடற்படை அதிகாரிக்கான பணிக்கான தேர்வில் கயிறுஏறும்போது கைதவறி கீழேவிழுந்தார்.தண்டுவடம் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழே உறுப்புகள் செயல்படா நிலையில் மிக ஆபத்தான நிலையில் மருத்துவ...