பலப்படுத்தும் பயணங்கள்: முனைவர் சௌந்தர மகாதேவன்

பலப்படுத்தும் பயணங்கள் முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 பயணமெனும் நகர்வுத் தியானம் உங்கள் குடும்பத்தாரோடு சுற்றுலா சென்ற நிமிடங்களை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எப்போதும் குறைவாகப் பேசும் உங்கள் மகன் உங்களுக்கு வெகுநெருக்கமாகியிருப்பான். இரண்டடி தூரத்தில் நின்று பேசுகிற உங்கள் மகள் உங்களுக்கு நெருக்கமாகியிருப்பாள். எப்போதும் உங்கள் குறைகளையே பிரகடனப்படுத்தும் உங்கள் அலவலக நண்பரோடு சுற்றுலா சென்றதுண்டா? சென்றிருந்தால் நீங்களும் அவரும் விசாலமாயிருப்பீர்கள். தூரங்களைத் துரத்தும் நேரங்களைச் சுற்றுலா நமக்குச் சத்தமில்லாமல் தந்துசெல்கிறது. பிணக்கை விடுத்துப் பிணைப்பையும் ஓர் இணைப்பையும் சுற்றுலா உருவாக்குகிறது. பிளவுபட்ட மனங்களை நெருக்கிநிறுத்துகிறது. ஓட்டத்தையும் முக வாட்டத்தையும் தடுத்து இறுக்கத்தை நிறுத்தி நெருக்கத்தை உருவாக்குகிறது. பண்பாட்டை நமக்குக் கற்றுத்தருகிறது. நல்ல பழக்கவழக்கங்களை நமக்குக் கற்றுத்தருகிறது. வியப்பின் விர...