உலகசாதனை நூல் வெளியீட்டுவிழாவில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் எழுதிய நூல் வெளியீடு

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை, சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து 2016 செப்டம்பர் 12,13 ஆகிய நாட்களில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரேநாளில் 430 நூல்கள் வெளியிடும் உலகசாதனை நிகழ்ச்சியை நடத்தின. அதில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் எழுதிய “இறையருட்கவிமணி கா.அப்துல்கபூர்” எனும் நூல் உள்ளிட்ட 425 நூல்களை தமிழக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட மலேசியாவின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ சரவணன் அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டார். மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் 2015 ஆம் ஆண்டு சனவரி 29 பெப்ரவரி 1 வரை நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ்மாநாட்டில் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து பேராசிரியர் ச.மகாதேவன் எழுதிய பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய நூல்களை டத்தோ சாமிவேலுவைக் கொண்டுவெளியிட்டுச் சிறப்புச்...