பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மகளிர்தின விழாச் சிறப்புக் கருத்தரங்கு
நம்முடைய வாழ்வின் நேரான எண்ணங்களே வெற்றிகளாக மாறுகின்றன – திருநெல்வேலி சார்பு நீதிபதி ஜெ. தமிழரசி பேச்சு பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் மாணவர்பேரவையும் இணைந்து 08.03.2017 காலை 10.30 மணிக்கு மகளிர்தின விழாச் சிறப்புக் கருத்தரங்கை உரையரங்கில் நடத்தியது. கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் ச. மகாதேவன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் கருத்தரங்க தலைமையுரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முகம்மது நவாப் உசேன் , அரசுதவிபெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர் , மாணவர் பேரவையின் தேர்தல் ஆணையர் பேராசிரியர் பி.ஏ.அப்துல்கரீம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய அலுவலகத்தின் கோமதிநாயகம் , தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அ.மு. அயூப்கான் , விலங்கியல் துறைத் தலைவர் சித்தி ஜமீலா , கணிதவியல் துறைத் தலைவர் ரஷீதா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி சார்பு நீதிபதி மற்றும் திருநெல்வேலி மாவட்டச் சட்டப்பணிகள் ஆணையச் செயலாளர் ஜெ. தமிழரசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு