டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ..மாற்றுத்திறனாளிகளை மனம்திறந்து ஊக்குவிப்போம்

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2016/12/02/ArticleHtmls/02122016010003.shtml?Mode=1 மாற்றுத்திறனாளிகளை மனம்திறந்து ஊக்குவிப்போம் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி 9952140275 இறைவன் தந்த இனிய வரம் இந்த அழகிய வாழ்க்கை. சில நேரங்களில், சில காரணங்களால் சிலர் மாற்றுத் திறனாளிகளாய் பிறந்துவிடுகின்றனர், அல்லது சில விபத்துகள் அப்படி ஆக்கிவிடுகின்றன. பூச்சியாய் பிறந்தாலும் தளராது பறக்கிறது தட்டானெனும் தன்னிகரற்ற பறவை. தட்டானே எல்லாவற்றையும் விட்டு விடுதலையாகி சுதந்தர வானில் சுற்றித் திரியும்போது நாமேன் கவலைப்படவேண்டும்? உலகமே போற்றிப்புகழும் ஆற்றல் பெற்ற மாற்றுத்திறனாளிகள் ஏன் ஏன் வருந்தவேண்டும்? நொந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? கசந்த வாழ்க்கையை வசந்த வாழ்க்கையாய் மாற்றும் மூன்றாம் கையான நம்பிக்கையை மறந்துவிட்டு அவர்கள் ஏன் வருத்தத்தின் வாசலை தன் நிறுத்தத்தின் வாசலாய் எண்ணிக்கொண்டு துயர்படவேண்டும்? புழுவுக்கு ஆசைப்பட்டு தூண்டில் கொக்கியில் தொங்கிக்கொண்டிருக்கிற மீன்களாய்...