இணையப் பயன்பாட்டில் கவனமாய் இருங்கள்: பேராசிரியர் சௌந்தர மகாதேவன்

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2018/04/06/ArticleHtml இணையப்பயன்பாட்டில் கவனமாய் இருங்கள் பேராசிரியர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 இணையம் இல்லாமல் இருக்கமுடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். எல்.கே.ஜி.குழந்தைகள் முதல் எம்.பி.பி.எஸ். பயிலும் மருத்துவ மாணவர்கள் வரை அன்றாட வாழ்வில் இணையத்தின் பாதைகளில் இயங்கிக்கொண்டிருக்கிறோம். பெட்டிக்கடைகளில் பலசரக்கு வாங்கிய நிலை மாறி இணையக் கடைகளில் நாம் விரல்களால் விற்பனைச் சந்தைக்குள் நுழைந்து நாட்களாகிவிட்டன. ரயில்முன்பதிவு, மின்கட்டணம் செலுத்துதல், இணையவங்கிச் சேவை என்று இணையவாசிகளாகிவிட்டோம். சில நொடிகள் இணையவேகம் குறைந்துபோனால்கூட நம்மால் தாங்க முடியா அளவு மனச்சோர்வுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஏதேனும் கூட்டங்கள் நடந்தால் கூட அவற்றிலிருந்து விலகி தலை குனிந்தபடி நம் கையிலுள்ள ஸ்மார்ட் போன்களின் செயலிகளுக்குள் நுழைந்து எதையாவது தேடிக்கொண்டிருக்கும் கவனமற்றவர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றோம்.. நம் இனிய இரவுகளை இணையத்தில் தொலைத்து இரண்...