தமிழ் இந்து வந்த நாள் முதல் இன்று வரை அந்த இதழின் வாசகன். ஆபாசமில்லாமல் தமிழில் ஒரு நாளிதழா என்ற கேள்விக்கான விடையை இந்து மூன்றாம் ஆண்டின் தொடக்கம் வரை மிகத் தரமாகத் தந்துகொண்டிருக்கிறது. முதலாம் ஆண்டின் வாசகர் திருவிழா திருநெல்வேலியில் நடந்தபோது இந்து என்னையும் மேடை ஏற்றிப் பெருமைப்படுத்தியது. நான் மேடையில் முன்வைத்த சில ஆலோசனைகளை அடுத்த வாரங்களில் செயல்படுத்தத் தொடங்கியது. இந்து ஆசிரியர் திரு.அசோகனிடமும் இணைப்பிதழின் ஆசிரியர் திரு.அரவிந்தனிடமும் கொட்டும் மழையில் திருநெல்வேலி எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் காட்டிய ஆர்வம் நம்பிக்கை தந்தது. அப்போது நான் கலை ஞாயிறு பகுதியில் எழுதிய ந.பிச்சமூர்த்தி,லா.ச.ரா.,நகுலன்,பிரமிள் குறித்த கட்டுரைகளை இந்து சலிக்காமல் வெளியிட்டுக் கொண்டே இருந்தது. வானொலியின் வசந்தகாலம் கட்டுரை அவுஸ்திரேலியா,இலங்கை,இங்கிலாந்து நாட்டு கலை இலக்கிய வாசகர்களைக் கவர்ந்தது. காணமல் போகும் கடித இலக்கியம் கட்டு...