ஜெர்மன் நாட்டிலிருக்கும் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாசிணி பங்கேற்றுச் சிறப்புரை ஆய்வுக்கட்டுரைகள் அனுப்பக் கடைசிநாள் 10.12.2016 பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும், ஜெர்மன் தமிழ்மரபு அறக்கட்டளையும் இணைந்து வரும் 27.12.2016 அன்று தமிழ்மரபுகளை ஆவணப்படுத்துதல் தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கினைக் கல்லூரி உரையரங்கில் நடத்தஉள்ளன. ஜெர்மன் நாட்டிலிருக்கும் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாசிணி பங்கேற்றுச் சிறப்புரை கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்துரை வழங்க, கல்லூரித் தாளாளர் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி கருத்தரங்கினைத் தொடங்கிவைத்து “மரபுத்தமிழ்” எனும் ஆய்வுக்கோவையை வெளியிட, அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டு ஜெர்மன் நாட்டிலிருக்கும் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாசிணி “தமிழ்மரபுகளை ஆவணப்படுத்தவேண்டிய தேவைகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். 2001 இல் மலேசியாவில் தொடங்கப்பட்ட தமிழ்மரபு அறக்கட்டளை மலேசியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி,இங்கிலாந்து, இந்தியா...