2015 இல் தமிழ்இலக்கியப் போக்குகள் குறித்த இருநாள் கருத்தரங்கு திருநெல்வேலியில் இயங்கிவரும் “மேலும்”தமிழ்இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தில் தமிழ்படைப்பிலக்கியம், ஊடகம் தொடர்பான இருநாள் கருத்தரங்கம் சனவரி 30,31 ஆகிய இருநாட்கள் நடைபெற உள்ளன. அக்கருத்தரங்கு குறித்து “மேலும்” தமிழ் இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் மேலும் சிவசு, தலைவர் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம், செயலாளர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. தமிழ்இலக்கியம் குறித்த திறனாய்வுப் போக்கை ஆய்வுநோக்கில் கல்விப்புலங்களில் வளர்க்கும் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும் தமிழகக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் பயிலும் இளமுனைவர்,முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு தமிழ்ப்படைப்புலகம் குறித்த கருத்தரங்குகளையும் பயிலரங்குகளையும் தொடர்ந்து நடத்திவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் திறனாய்வுத்துறையில் சிறந்துவிளங்கும் தமிழ்த்திறனாய்வாளர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு ரூ 25000 பொற்கிழியையும் ‘மேலும்’ திறனாய்வாளர் விருதினையும் வழங்கிவருகிறது.தமிழ்ப்படைப்பிலக...