பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 எந்தப் பாறைக்குள்ளும் வேர்பரப்பும் தன்னைத் தாவரமாய் உணரும் எந்தச் சிறுசெடியும்.எழுத்தாளனும் அப்படித்தான். எதுகுறித்து அவன் எழுதப்போகிறானோ அதுவாகவே அவன்மாறும் அற்புதவிந்தையின் வெளிப்பாடே எழுத்து! அவநம்பிக்கையின் அண்டைவீட்டுக்காரனாய் எழுத்தாளன் ஒருபோதும் இருபத்தில்லை. வேம்பு வழக்கமாகக் கசக்கத்தானே செய்யும்..ஆனால் அலோபதி மருத்துவத்தால்கூடக் குணப்படுத்த முடியாத வைரஸ்காய்ச்சலை நிலவேம்புதானே கட்டுப்படுத்தியது.. அப்படிபட்ட நிலவேம்புதான் விக்கிரமன். வேம்பு என்ற புனைப்பெயரில்தான் விக்கிரமன் கதைஇலக்கியத்திற்குள் நுழைந்தார். ஆனாலும் அற்புதமான கருக்களில் தமிழ்ப் படைப்பிலக்கியம் படைத்த “வேம்பு” எனும் விக்கிரமனின் எழுத்துகள் இறுதிமூச்சு வரை இனிக்கத்தான் செய்தன. 13 வயதில் எழுதத்தொடங்கி 88 வயதுவரை இடைவிடாமல் எழுதிய அன்பாளர் எழுத்தாளர் விக்கிரமன்.அவர் படைத்த நந்தபுரத...