திருநெல்வேலியில் “மேலும் இலக்கிய அமைப்பு” நடத்தும் புதுமைப்பித்தன் நினைவுநாள் கருத்தரங்கு

தமிழ்ச் சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் நினைவு நாளன்று அவர் படைப்பிலக்கியங்கள் குறித்த கருத்தரங்கை “மேலும்” இலக்கிய அமைப்பு தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்திவருகிறது. இவ்வாண்டு புதுமைப்பித்தன் நினைவுநாளன்று திருநெல்வேலியில் நடைபெறஉள்ள இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், தமிழ்ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இக்கருத்தரங்கு குறித்து மேலும் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு, தலைவர் பேராசிரியர் கட்டளை கைலாசம், செயலாளர் பேராசிரியர் ச.மகாதேவன் ஆகியோர் தெரிவித்துள்ள அறிக்கையில் உள்ளதாவது.. தமிழ்ச் சிறுகதையின் தடத்தை மாற்றிய புதுமைப்பித்தன் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்து பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து திருநெல்வேலி மதுரை திரவியம் இந்துக் கல்லூரியில் பி.ஏ.பட்டம் பெற்றவர். திருநெல்வேலியையும் சென்னையையும் களமாகக் கொண்ட புகழ்பெற்ற சிறுகதைகள் எழுதியவர். மொழிபெயர்ப்பாளராக, கவிஞராக, இதழாசிரியராக உலக இலக்கியங்களை உள்வாங்கிப் பல சோதனைமுயற்சிகளைத் தமிழ்ப்படைப்புலகில் செய்த ...