மேலும் இலக்கிய அமைப்பு நடத்தும் இருநாள் தேசியக் கருத்தரங்கம்
டிச.17,18 ஆகிய நாட்களில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடக்கிறது *நோபல் பரிசு பெற்ற நாவல் குறித்த ஆய்வுரை *வண்ணநிலவன் படைப்புலகம் குறித்த ஆய்வுக் கருத்தரங்கம் திருநெல்வேலியில் செயல்பட்டுவரும் மேலும் இலக்கிய அமைப்பு உலகஅளவில் கவனம் பெறும் படைப்பிலக்கியங்கள் குறித்தும் தமிழின் சிறப்பான படைப்பிலக்கிய ஆளுமைகள் குறித்தும் ஆய்வுமாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகளை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இவ்வாண்டுக்கான கருத்தரங்கினை மேலும் இலக்கிய அமைப்பு டிச.17,18 2016 ஆகிய நாட்களில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடத்த உள்ளது. மேலும் இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு, தலைவர் பேராசிரியர் கட்டளை கைலாசம், செயலாளர் பேராசிரியர் ச.மகாதேவன் ஆகியோர் வரவேற்றுப் பேசுகின்றனர். நோபல் பரிசு பெற்ற நாவல் குறித்த ஆய்வுரை முதல் நாளில் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் நோபல் பரிசுபெற்ற நாவல் “ தனிமையின் நூறு ஆண்டுகள் ” (One Hundred years of solitude), தமிழவனின் “ ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ” நாவல் இரண்டையும் , ‘ மாய யதார்த்தவாத ’ ப் (...