பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் திரு.உதயசந்திரன் அவர்களின் அருமுயற்சி..EVALUATION FRAME WORK -SEMINAR ON DEVELOPING NEW CURRICULAM

பள்ளிக்கல்வித்துறை நடத்திய புதிய பாடத்திட்டக் கருத்தரங்கம் பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக உதயசந்திரன் இ.ஆ.ப.வந்த பின் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. பத்தாம்வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட முறைமை நிறுத்தப்பட்டது. பதினொன்றாம் வகுப்பு ஆண்டுத்தேர்வு அரசுப் பொதுத் தேர்வாய் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. தேர்வு மதிப்பெண் 200 லிருந்து 100 ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்களின் பொதுஅறிவுத் திறனை மேம்படுத்தவும் மொழித்திறனை வளப்படுத்தி வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் தமிழகமெங்குமுள்ள 31322 அரசுப் பள்ளிகளுக்கு ரூ 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் வாங்கப்பட உள்ளன. பள்ளிமாணவர்கள் போட்டித்தேர்வுகளில் பங்குபெறப் பயிற்சிதரும் நோக்கில் அனைத்து ஒன்றியங்களிலும் போட்டித் தேர்வுப்பயிற்சி மையங்களை அரசு ஏற்படுத்த உள்ளது. பாடத்திட்ட மாற்றம் தேசிய அளவிலான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறப்பாக எதிர்கொள்ள வைக்கும் நோக்கில் தமிழக அரசின் பள்ளிக...