தி இந்து தமிழ் நாளிதழில் இளமை புதுமை பகுதியில் என் கட்டுரை http://tamil.thehindu.com/society/lifestyle/article19770190.ece

http://tamil.thehindu.com/society/lifestyle/article19770190.ece மகா நிதியாய் மனதில் நின்ற மாணவர் தென்பத்து தெ.ஆறுமுகம் பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை, 9952140275 நினைத்துப்பார்கிற யாவுமே உயிரின் வேரை நனைத்துப் பார்க்கத்தானே செய்யும்! என் அன்பு மாணவன் தென்பத்து தெ.ஆறுமுகம் என்றும் மறக்க இயலாத மகாநதியாக மனதுக்குள் பதினெட்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறான். வெளியே இருக்கும் செய்திகளை மாணவர்களின் உள்ளுக்குள் ஊற்றுவதுமட்டும்தான் கல்வியா? அவர்களின் உள்ளிருக்கும் ஆற்றலை ஏன் வெளிக்கொண்டு வர நாம் ஏன் முயலக்கூடாது என்று எனக்குள் கேட்டுக்கொண்டவானாய் அப்போதுதான் (1998) திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையில் விரிவுரையாளராய் பணிக்குச்சேர்ந்தேன். “சமூகநலன் நாடும் சாதனை மாணவர்களை நீங்கள் நம் கல்லூரியில் உருவாக்கவேண்டும்! ” இதுதான் ஆட்சிக்குழு என் ஆசிரியப் பணியின் முதல்நாளில் சொன்ன சொற்கள்! ஏறக்குறைய என்னிடம் பயின்ற மாணவர்களைவிட ஐந்துவயது மூத்தவனாய் அப்போது இருந்ததால் ...