தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்
தமிழ் இலக்கியப் பதிவுகளில் சூரசம்ஹாரம் பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி சஷ்டியில் விரதமிருந்தால் அகம் எனும் பையில் அருள்சுரக்கும்! அந்த அளவு வலிமை மிகுந்த கந்தர் வழிபாடும் சூரசம்ஹாரமும் பல நூறு ஆண்டுகளாகத் தமிழகத்தில் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டதைத் தமிழ் இலக்கியம் பாடல்வரிகளால் பதிவுசெய்துள்ளது. தேவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்களைத் தந்துவந்த சூரபத்மனின் அகந்தையை அழிப்பதற்குச் சிவபெருமான் தன் அதோமுகத்தைக் காட்ட அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளிருந்து ஆறுமுகங்கள் ஆறு குழந்தைகளாய் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் தாமரை மலர்களில் எழுந்தருள, அவர்களை ஆறுகார்த்திகைப் பெண்கள் வாரியணைக்க ஈசன் சில காலத்தில் ஆறுமுகப்புதல்வர்களை ஒன்றாக்கினார். முருகப்பெருமான் சூரனை அழிக்க நூறுமுகங்களின் ஒளிப்பிழம்போடு ஆறுமுகமாய் அவதரித்தார். அன்னை பராசக்தி தன் சக்தியை ஒன்றுதிரட்டிச் சக்திவேலை தந்தாள். தாய் தந்த வேலை சூரபத்மன் மீது திருமுருகன் வீச அவன் மாமரமாய் மாயத்தோற்றம் எடுத்தான். முருகனின் சக்திவேல் அம்மரத்தைப் பிளக்க, மயிலாகவும் சேவலாகவும் சூரபத்மன் மறுவ