பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப் பேரவையின் சார்பாக மாணவர் வாசகர் வட்டம் நூல் திறனாய்வு நிகழ்ச்சி மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்து நூல்களை திறனாய்வு செய்யும் நோக்கில் பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப் பேரவை - மாணவர் பேரவையுடன் இணைந்து மாணவர் வாசகர் வட்ட நூல் திறனாய்வு நிகழ்ச்சியை 06.11.2017 அன்று நடத்தின. மாணவர் பேரவைத் தலைவர் ஜா. அஹமது தமீமுல் அன்சாரி வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் அவர்கள் தலைமையுரையாற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மாணவர் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் ச. மகாதேவன் நல்ல நூல்களைத் திறனாய்வு செய்வது எப்படி ? எனும் தலைப்பில் அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் எனும் நூலை மாணவர் மு. பேச்சிராஜ் , திசைகள் நோக்கிய பயணம் எனும் நூலை மாணவி பா.ர. தாரணி , சங்கரராம பாரதி எழுதிய தன்னம்பிக்கை நாட...