பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வளாக நேர்காணல் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பயிற்சி நிகழ்ச்சி பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சி நிறுவனம் , பொங்கு வென்சர்ஸின் ஒரு பகுதியாகத் திகழும் வீட்டன் நிறுவனம் திருநெல்வேலியின் மூன்று சுழற்கழகங்களுடன் இணைந்து 24.03.2018 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 40 தொழில் நிறுவனங்கள் பங்குபெறும் வளாக நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்துகிறது. பட்டதாரிகள் பங்கேற்கலாம்: எம்.ஈ. , எம்.டெக். , எம்.பி.ஏ. , எம்.சி.ஏ. , எம்.ஏ. , எம்.எஸ்.சி. , எம்.காம். , பி.ஈ. , பி.டெக். , பி.ஏ. , பி.எஸ்.சி. , பி.காம். , பி.பி.ஏ. , பி.சி.ஏ. , ஹோட்டல் மேனேஜ்மென்ட் , ஐ.டி.ஐ. , டிப்ளமோ பெற்றவர்கள் மற்றும் இறுதி ஆண்டு பயிலும் ம...