தினமலர் என் பார்வைக் கட்டுரை

கவலைகளைக் கைகழுவுங்கள் ஜென்கவிதைகளாய் இருங்கள் பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி,9952140275 http://www.dinamalar.com/news_detail.asp?id=2031078 எப்போதும் வெறுமை. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற குமுறல், எதையும் தாங்க முடியவில்லாத கோழையாக நான் எப்படி மாறினேன்? என்கிற கேள்விகள் இன்றைய நாளில் தவிர்க்க இயலாததாகிவிட்டன. எல்லாத் தவறுகளுக்கும் நான் தான் காரணம்,நான் ஏன் பிறந்தேன் என்றே தெரியவில்லை, எத்தனையோ பாடங்களைப் படித்தேன்,ஆனால் எதற்கும் அலட்டாமல் எப்படி ஒரு பூவைப் போல் மலர்ச்சியோடிருப்பது என்று தெரியவில்லை! என்று வருந்துவோரா நீங்கள் உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை. உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் ஜென்கவிதைகளைப் படியுங்கள், ஜென்கவிதைகளாய் மாறுங்கள் என்பதுதான். தியானத்தின் மொழி மௌனம். உள்ளார்ந்த கவிதையின் மொழியும் மௌனம்தான். ஜென் என்கிற சீனச்சொல்லின் பொருள் தியானம் செய் என்பதாகும். எது தியானம் என்ற கேள்வியின் வேரில்தான் ஆயிரமாயிரம் ஜென் கவிதைகள் பிறக்கின்றன. சிந்தனை அற்ற நிலைய...