Posts
Showing posts from September, 2018
தினத்தந்தி நாலாம் பக்கத்தில் சௌந்தர மகாதேவன் கட்டுரை 25.9.2018
- Get link
- X
- Other Apps
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி பேச்சு
- Get link
- X
- Other Apps

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா மற்றும் மின்னோவியம் குறும்படத் தயாரிப்பு மன்றத் தொடக்க விழா “ சக மனிதர்கள் மீதான அக்கறையில்லாதவர்கள் படைப்பாளியாக இருக்க முடியாது ” பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதித் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா இன்று 25.09.2018 காலை 11 மணிக்கு நடைபெற்றது. கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுத் தமிழ்த்துறை உருவாக்கியுள்ள இன்பத் தமிழ் எனும் நூலை வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ. மீரான் முகைதீன் , அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர் , பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசைன் மற்றும் கல்லூரியின் அரசுதவிபெறாப் பாடங்களின் ...
தன்னம்பிக்கைக் கட்டுரை: தினமலர் என் பார்வை 26.9.2018 : சௌந்தர மகாதேவன்
- Get link
- X
- Other Apps
மரபின் வேரில் பூத்த நவீன நாடக்கலைஞர் முத்துசாமி : சௌந்தர மகாதேவன்
- Get link
- X
- Other Apps

மரபின் வேரில் பூத்த நவீன நாடக்கலைஞர் முத்துசாமி சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி சங்கரதாஸ் சுவாமி, பம்மல் சம்பந்த முதலியார், தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், மதுரகவி பாஸ்கரதாஸ் , கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நவாப் ராஜமாணிக்கம், போன்ற கலைஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நாடகத் தமிழ் அதன்பின் கூத்துப்பட்டறை முத்துசாமி, இராமாநுஜம், ஞானி, மு.இராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, பூபதி, பிரசன்னா ராமசாமி, பார்த்திபராஜா போன்றோரால் அடுத்த நிலைக்கு நகர்த்தப்பட்டிருப்பதை மறுக்கஇயலாது. தன்னைப் பாதித்த நிகழ்வுகளை நாடகங்களாக மாற்றுவதில் தனித்துவமான படைப்பாளராக அரைநூற்றாண்டுக்காலமாய் இயங்கிக்கொண்டிருக்கும் முத்துசாமியின் நேர்காணல் இன்று ஆழமான பல வினாக்களுக்கு விடைதந்தது. அவர் நாடங்கள் மண்சார்ந்த பதிவுகளாகவும் சமூகத்தில் புரையோடிய மூடப்பழக்கவழக்கங்களைப் படிமங்கள் மூலம் சாடுவதாகவும் சிறுவயதில் கேட்ட பேய்க்கதைகள் உள்ளிட்ட சுவாரசியமான கதைகளின் வேறுபட்ட வடிவங்களைத் தன்னுள் கொண்டதாகவும் அமைகின்றன. தெருக்கூத்தைத் தமிழ் ...