கவிஞர் கல்யாண்ஜிக்கு 2014 ஆம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருது

கல்யாண்ஜி,வண்ணதாசன் என்று அறியப்படுகிற தி.கல்யாணசுந்தரம் என்கிற இனிய படைப்பாளர் எனக்குப் பிடித்தமானவர்.2002 ஆம் ஆண்டு “வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள்”எனும் தலைப்பில் என் அன்புநெறியாளர் முனைவர் வே.கட்டளை கைலாசம் அவர்களின் வழிகாட்டலில் அவரது கதைகள்,கவிதைகள்,கடிதங்கள்,உரைநடைச் சித்திரங்கள் படித்தபோது மிகவும் அழகாயிருந்தது.அவரது நடை படப்பிடிப்பு போன்றது. யாரும் கண்டுகொள்ளாத எளியமனிதர்கள் அவரது படைப்புமாந்தர்கள்.பத்தாம்வகுப்புப் படித்தபோது அவரது முதல்கதை கே.டி.கோசல்ராம் நடத்திய இதழில் வெளிவந்தது. அகம்புறம் அவரது தனித்துவமான மொழிநடைக்குச் சான்று.சந்தியா பதிப்பகம் வண்ணதாசன் கதைகள் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறது. முகநூலில் அவரது கவிதைகளுக்கு மிகப்பெரிய வாசகர் கூட்டமே உள்ளது.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித்தமிழ்த்துறையின் சார்பில் “வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள்” எனும் பொருளில் ஒருநாள் கருத்தரங்கு நடத்தியபோது நாள்முழுக்க தி.க.சி.எங்களோடு அரங்கில் இருந்து,நாஞ்சில்நாடன்,தமிழவன்,முத்துகுமார்,சாம்ராஜ்,கிருஷி,சிவசு,கட்டளை கைலாசம் போன்றோரின் உரையைச் செவிமடுத்ததும் நிறைவில் வண்ணத...