கவிஞர் கல்யாண்ஜிக்கு 2014 ஆம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருது




கல்யாண்ஜி,வண்ணதாசன் என்று அறியப்படுகிற தி.கல்யாணசுந்தரம் என்கிற இனிய படைப்பாளர் எனக்குப் பிடித்தமானவர்.2002 ஆம் ஆண்டு “வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள்”எனும் தலைப்பில் என் அன்புநெறியாளர் முனைவர் வே.கட்டளை கைலாசம் அவர்களின் வழிகாட்டலில் அவரது கதைகள்,கவிதைகள்,கடிதங்கள்,உரைநடைச் சித்திரங்கள் படித்தபோது மிகவும் அழகாயிருந்தது.அவரது நடை படப்பிடிப்பு போன்றது.

யாரும் கண்டுகொள்ளாத எளியமனிதர்கள் அவரது படைப்புமாந்தர்கள்.பத்தாம்வகுப்புப் படித்தபோது அவரது முதல்கதை கே.டி.கோசல்ராம் நடத்திய இதழில் வெளிவந்தது.

அகம்புறம் அவரது தனித்துவமான மொழிநடைக்குச் சான்று.சந்தியா பதிப்பகம் வண்ணதாசன் கதைகள் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறது.

முகநூலில் அவரது கவிதைகளுக்கு மிகப்பெரிய வாசகர் கூட்டமே உள்ளது.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித்தமிழ்த்துறையின் சார்பில் “வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள்” எனும் பொருளில் ஒருநாள் கருத்தரங்கு நடத்தியபோது நாள்முழுக்க தி.க.சி.எங்களோடு அரங்கில் இருந்து,நாஞ்சில்நாடன்,தமிழவன்,முத்துகுமார்,சாம்ராஜ்,கிருஷி,சிவசு,கட்டளை கைலாசம் போன்றோரின் உரையைச் செவிமடுத்ததும் நிறைவில் வண்ணதாசன் அய்யா அருமையான ஏற்புரை வழங்கியதும் என் வாழ்வில் நான் மிகவும் மகிழ்ந்த தருணங்கள்..

அரைநூற்றாண்டு தாண்டி எழுதிக்கொண்டிருக்கும் அற்புதமான எழுத்தாளருக்கு வைரமுத்து விருது வழங்கியிருப்பது நல்ல நிகழ்வு..எழுத்தாளர்களை வாழும்போது அங்கீகரிக்காமல் காலத்திற்குப் பின் தூக்கித்திரிவதை இனியாவது நிறுத்துவோம்.

அன்பாளர் கல்யாண்ஜி அவர்களை வாழ்த்துவோம்.

சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி


Comments

Popular posts from this blog

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி