பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார் நூல்கள் மலேசியாவில் வெளியீடு
முனைவர் ச.மகாதேவன், திருநெல்வேலியில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். வண்ணதாசன், இணையத்தமிழ் என்ற இருநூல்களை எழுதியுள்ளார். தமிழ்இணையப் பல்கலைக்கழகத்தில் அவர் எழுதிய சிற்றிலக்கியம், புராணம்,காப்பியயங்கள் தொடர்பான ஆறுபாடங்கள் மின்நூல்களாகப் பாடத்திட்டத்தில் உள்ளன. சௌந்தர மகாதேவன் என்கிற பெயரில் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணையத்தில் இடம்பெற்றுள்ளன. மலேசியாவில் கடந்த சனவரி 29- பிப்ரவரி 1, 2015 வரை நடைபெற்ற ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டில் சென்னை கலைஞன் பதிப்பகம் வெளியிடப்பட்ட பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் எனும் இரு நூல்களை அவர் எழுதியுள்ளார். இந்த நூல்களில் வைணவ பக்திஇயக்கத்தின் முன்னோடிகளாகத் திகழும் ஆழ்வார்களில் முதல் இருஆழ்வார்கள் குறித்து எழுதியுள்ளார். ஆழ்வார்களின் வரலாறுகளில் கருடவாகனப்பண்டிதர் இயற்றிய திவ்ய சூரிசரிதமும், அதன்பின் பெருமாள் ஜீயர் மணிப்பிரவாள நடையில் எழுதிய ஆறாயிரப்படி குரு பரம்பரையும் முதன்மையானவை. வைணவ ஆசாரியரான நாதமுனிகள் பன்னிருஆழ்வார்களின் பாசுரங்கள...