மழைக்காலப்பொழுது : செளந்தர மகாதேவன்




மழைக்காலப் பொழுதுகளில்





கால்களும் கண்களாகின்றன
பள்ளத்தை மறைத்து ஓடும்
மழைநீரின் மகத்துவத்தைக்
கால்களே முதலில் அறியும்.
மழை சோம்பேறிகளையும்
கடிது விரையச் செய்கிறது
ஓடுவதைப் பார்க்க
ஒதுங்கிநிற்கக் கற்றுத்தருகிறது
மழையால் மட்டுமே
குடை வள்ளல்களை
உருவாக்க முடிகிறது.
மேலிருந்தபோதும்
கீழ் நோக்கிப் பார்க்கவும்
உயரத்தில் விழுந்தாலும
பள்ளம் நோக்கிப் பாய
மழையால் முடிகிறது.
மழையின் நனைத்தலையும்

 மழையில் நினைத்தலையும்
பெய்தலை அளத்தலையும்
மழை சாத்தியமாக்குகிறது
தண்மையைத் தனதாக்கி
பள்ளத்தைக் குளமாக்கி
உள்ளத்தை ரசனையாக்கி
கொட்டிக் கொண்டிருக்கிறது
அக்னி நட்சத்திரத்தையும்
அணைத்த கையால் குளிரவைத்து
உங்களுக்கும் எனக்கும் நமக்கும்
யாருக்கும் பொதுவாக.


.
செளந்தர மகாதேவன்

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை