தி.ஜானகிராமன் என்கிற கதைக் காவேரி : முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

ஒரு எழுத்தாளரைப் பற்றி இன்னொரு எழுத்தாளர் உணர்வுப்பூர்வமாக எழுதுவது எத்தனை அருமையானது. தி.ஜானகிராமன் குறித்து பாலகுமாரன் எழுதிய கட்டுரையை வாசித்தபோது நிறைவாய் இருந்தது. இருட்டுப்பரப்பில் சட்டென்று ஒளியை வீசி இருண்மையைக் கேலிசெய்கின்ற மின்மினிப்பூச்சிகளாய் சில சம்பவங்களையும்,சில மனிதர்களையும் பற்றிய நினைவுகள் சில கணங்களில் சட்டென்று நம் மனதில் மின்னலாய் வெட்டி ஒளியை வீசிச்செல்லும். தி.ஜானகிராமன் அப்படிப்பட்டவர். சொற்கள் குறுகிமௌனமாய் மறைவதைப்போலஅவர் படைத்த கதைகள் நம்முள் கலந்து,பாத்திரங்கள் கரைந்து அவரது இனிய காவேரியைப் போலச் சமுத்திரத்தை நோக்கிச் சலனமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஆண் பெண் உறவுகளை மையமிட்ட உளநிலைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட பாத்திரங்களைப் பேசவிட்டு உணர்ச்சிகரமான,தேர்ந்த மொழிநடையால் புதினங்கள் படைத்து இறவாப்புகழ் பெற்றவர். தன் எழுத்துத் தூரிகையால் கும்பகோணம் மண்மீது வாசகர்களுக்குக் காதலை உண்டாக்கியவர். அவரது மோகமுள் தைத்து அதன் ரணத்திலு...