வானத்தை வசப்படுத்திய அக்கினிச் சிறகு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களுக்கு எழுத்தால் அஞ்சலி

வானத்தை வசப்படுத்திய அக்கினிச் சிறகு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் ................................................................................................................................................................. முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி(தன்னாட்சி), திருநெல்வேலி,9952140275 mahabarathi1974@gmail.com சிலரைப் பார்க்கும்போது சாதிக்கலாம் என்று தோன்றுகிறது.சிலரைப் பார்க்கும்போது சாதித்த விதத்தை, அவர்கள் நமக்குப் போதிக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது. மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஆவுல் பகீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘கலாம்அய்யா போல் சாதிக்கலாம்’ என்ற எண்ணம் நமக்குள்ளும் வருகிறது. காலம், காகிதத்தைக் கிழிப்பதாய் நினைத்து ஒரு கவிதையைக் கிழித்துவிட்டது.தன் இறுதிவினாடி வரை பேச்சும் மூச்சும் அன்னை பாரத்திற்கே என்று வாழ்ந்துகாட்டிவிட்டு விடைபெற்றது விஞ்ஞானம்.விண்வெளித்துறை ஆய்வறிஞராய்,அணுசக்தித்துறை விஞ்ஞானியாய்,ஒப்பிலா தேசபக்தராய்,இந்தியப் பண...