பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பேரிடர் நிவாரணஉதவிக்குழுவின் சார்பில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் பயிலும் மூவாயிரம் மாணவமாணவியர் இப்பணியைத்தொடங்கியுள்ளனர். கல்லூரி மாணவ மாணவியர், பொதுமக்கள், தன்னார்வத்தொண்டர்கள் தங்களிடம் உள்ள பொருட்களைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் மையத்தில் 9.12.2015 காலை 8 மணிமுதல் தரலாம். வேட்டி, நைட்டி, லுங்கி, துண்டு, சட்டை, சேலை,சுடிதார் போன்ற ஆடைகள், போர்வைகள்,பாய்கள்,டார்ச்லைட், எமர்ஜென்சி விளக்குகள், மெழுகுவர்த்திகள்,பிஸ்கெட் பெட்டிகள்,பால்பவுடர் டின்கள், பாத்திரங்கள்,தட்டு,டம்ளர்கள்,டெட்டால்,அத்தியாவசிய மருந்துகள், தண்ணீர்ப் பாட்டில்கள், செருப்புகள், ரஸ்க், குழந்தைகளுக்கான பால்பாட்டில்கள், கொசுவலைகள்,கொசுவர்த்திகள்,பற்பசை,சோப் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தரலாம். 9.12.2015 முதல் 13.12.2015 வரை நிவாரணப்பொருட்களை மாணவமாணவியரோடு பொதுமக்களும் வ...