திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் "மனத்துளி" 'கவிதை நூல் வெளியீட்டுவிழா







சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்  மாணவர் பேரவை நிறைவு வி


சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்  17.3.15 அன்று காலை 10 மணிக்கு மாணவர் பேரவை நிறைவு விழா நடைபெற்றது. திருநெல்வேலி காவல்துறை ஆணையாளர் திரு.சுமித்சரண் I.P.S. அவர்கள், சிறப்பு விருந்தினராய் பங்கேற்றுத் தமிழ்த்துறையும் மாணவர் பேரவையும் இணைந்து தயாரித்துள்ள மனத்துளிஎனும் மாணவர் கவிதைநூலை வெளியிட்டார்கள்.

கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் வாழ்த்திப்பேசினார். அரசுதவி பெறா வகுப்புகளின் இயக்குநர் பேராசிரியர் நவராஜ் சந்திரசேகர், பேரவைத் தேர்தல் ஆணையர் பேராசிரியர் கே.ரபி அகமது ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அதன் முதல்பிரதியை கல்லூரி ஆட்சிக்குழுவின் பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம்.சேக்அப்துல்காதர் பெற்றுக்கொண்டார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர் ,பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவர் பேரவைத் தலைவர் முஹம்மது அப்சர் வரவேற்றுப் பேசினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

படத்தில்: சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்ற  மாணவர் பேரவை நிறைவு விழாவில் திருநெல்வேலி காவல்துறை ஆணையாளர் திரு.சுமித்சரண் I.P.S. மாணவர்கள் “மனத்துளி” எனும் மாணவர் கவிதைநூலை வெளியிட அதன் முதல்பிரதியை ஆட்சிக்குழுப் பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம்.சேக்அப்துல்காதர் பெற்றுக்கொள்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானி : பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

இளையோர் தன்னம்பிக்கைக் கட்டுரை ;பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,