பதிவுக்காய்...



பௌர்ணமி நடுநிசியில்
தற்கொலை செய்து கொண்ட
சின்னஞ்சிறு பெண்ணாய்
அலையலையாக அக்
கேணியில் மிதக்கிறது
அந்த வெள்ளை நிலா

தூரத்தில் குழு விலங்குகளால்
சிதைக்கப்பட்ட பெண்ணின் கேவல்
எல்லாம் முடிந்தபின்
கூர்க்கா சைக்கிளில்
போய்க் கொண்டிருந்தான்
விசில் ஊதியபடி
தான் வந்து சென்றதைத்
தெரிவிப்பதற்காக

உயிருக்குப் போராடுபவனைச்
சென்று பார்ப்பது முதல்
அவனது இறுதி ஊர்வலத்தில்
கலந்து கொள்வது வரை
வருகைப் பதிவு தருவதும்
தலைகாட்டித் தெரிவதும்
எந்திரமயமாய்
எல்லோரும் செய்கிறோம்
என்று தணியும்
இந்த வருகைப் பதிவுத்தலைகாட்டல்கள்?


Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை