திருநெல்வேலி சௌந்தர மகாதேவன் கவிதை



தனக்குத்தானே
.................................
தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறான்
 கூச்சமில்லாமல் ஒருவன்.
தன்னைத்தானே செல்பிப் படம்
 எடுத்துக்கொள்கிறான்
தன்போதையில் மற்றொருவன்.
தன்னையே நொந்துகொள்கிறான்
 இழந்தசோகத்தில் பிறிதொருவன்.
தன்னைத் தானே சாட்டையால்
 அடித்துக்கொள்கிறான் தாங்கமுடியா
 பசியின் வலியால் இன்னொருவன்.
தனக்குத்தானே பேசிக்கொள்கிறான்
யாருமற்றுப்போன வேறொருவன்.
இப்படி யாரைப்பற்றிய கவலைகளுமின்றி
 அவரவர் அவரவரோடு போய்விட்டதால்
தானே செய்ய வேண்டியிருக்கிறது
தன்னையே தூக்கிநடப்பது உட்பட யாவற்றையும்.
*
சௌந்தர மகாதேவன்


Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை