சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி தி இந்து தேர்தல்ஆணையத்தோடும் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியோடும் இணைந்து நடத்திய ‘வாக்காளர் வாய்ஸ்’ புதியதலைமுறை வாக்காளர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. பதினெட்டு வயதான இளம்வாக்காளர்களை நாம் ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வியின் இனிய பதில் இந்து ஒருங்கிணைத்த “வாக்காளர் வாய்ஸ்” நிகழ்ச்சி. நம் கல்லூரியில் இந்து நடுப்பக்க ஆசிரியர் திரு.சமஸ் அவர்கள் முன்நிறுத்திப்பேசிய கர்மவீரர் காமராஜரும், மகாத்மா காந்தியும், ஜீவாவும் மாணவர்களுக்குப் புதியவர்கள் இல்லை என்றாலும் அவர்களின் உயரிய செயல்களால் அவர்கள் உயர்ந்து நின்றார்கள். தொய்வில்லாமல் மாணவர்களைத் தனதாக்கிக்கொண்டு வெளிச்சம் பாய்ச்சிய அவர் உரை வழக்கமான மேடைப்பேச்சு பாணியில் அமையாது வெகுஇயல்பாய் இருந்தது. அறிவித்தல், அறிவுறுத்துதல், தீவிரமாய் சிந்திக்கவைத்தல், அலசுதல், தீர்வுசொல்லல் என்ற பாணியில் அமைந்த அவர் உரை இறுதியில் இனி என்ன செய்வது? என்ற முடிவெடுத்தலில் வந்துநின்றபோது மாணவர்கள் உற்சாகமானார்கள். நாளிதழ் படிக்காதவர்கள் சனநாயகம் குறித்துப் பேசத் தகுதியற்றவர்கள் ...