ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி
செப்டம்பர்- 5 ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை பாடம் நடத்துபவர் ஆசிரியர், பாடமாய் நடப்பவர் நல்லாசிரியர். வழிகாட்டியாய் திகழ்பவர் ஆசிரியர், வாழ்ந்துகாட்டியாய் வாழ்பவர் நல்லாசிரியர். பெற்றெடுத்ததற்காகப் பெற்றோருக்கு நன்றி சொல்லும் நாம், எழுத்தறிவித்ததற்காக அகிலம் போற்றும் ஆசிரியர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறோம். தாய் ஈன்று புறந்தந்து தந்தையைக் காட்டுகிறாள், தந்தை, அறிவின் ஊற்றாயிருக்கும் ஆசிரியரை அடையாளம் காட்டுகிறார், அந்த உன்னதமான ஆசிரியரே தெய்வத்தை நமக்குத் தெரியப்படுத்துகிறார். அறியாமை இருளை அகற்றி அறிவு தீபத்தை ஏற்றிவைக்கும் நற்பணியை ஆசிரியர்களே செய்கிறார்கள். ஏணி, தோணி, அண்ணாவி, நார்த்தங்காய் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே இருக்கின்றன. ஏணி அனைவரையும் ஏற்றிவிட்டு இருந்த இடத்திலே இருக்கும், தோணி அனைவரையும் கரையேற்றிவிட்டுத் தண்ணீருக்குள்ளேயே மிதந்துகொண்டிருக்கும், அண்ணாவி என்கிற ஆசிரியர் தம் மாணவரைச் சனாதிபதியாக உயர்த்திவிட்டாலும் மிக அடக்கமாக அதே பள்ளியில், அதே வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருப்பார்,
Comments
Post a Comment