கடிதம் - தினமலர் என் பார்வை - பேராசிரியர் சௌந்தர மகாதேவன்

நலம் நலமறிய ஆவல்.. .................................................................................................................................................... முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி,9952140275 உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் சொந்தக் கையெழுத்தில் எதையாவது நீங்கள் எழுதி எத்தனைநாட்களாயிற்று! எழுத்து எத்தனை சுகமான அனுபவம்.வளைவும் நெளிவும் கூட்டி மனதின் நடைச் சித்திரத்தை விரல்கள் வழியே நம் சொந்தக் கையெழுத்தில் எழுதுவது எத்தனை அழகானது.”நலம் நலமறிய அவா” என்று தொடங்கி மற்றவை நேரில் என்று முடித்து அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி யுகமாகிவிட்டது.கிர்ரென்ற சப்தத்தோடு பித்தளைப் பாத்திரத்தில் அழகான கையெழுத்தில் நம் பெயரை எழுதித்தருகிற மனிதர்கள் குறைந்து போய்விட்டார்கள். எழுத்தைத் தொலைத்த எந்திரவாழ்க்கை இனிமையை இழத்தல் எத்தனை கொடூரமானது! வானத்தில் பறக்கும் பறவை விரிவானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பார்ப்போரைக் கழுத்துவலிக்...