வானம் புகுந்த வானம்பாடிக் கவிஞர்: நா.காமராசன்

வானம் புகுந்த வானம்பாடிக் கவிஞர் : நா.காமராசன் ....................................................................................................................... பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி நா.காமராசனின் தாக்கமில்லாமல் கவிதை எழுதிவிட முடியாது என்ற அளவு அழுத்தமாகத் தடம்பதித்த வானம்பாடிக் கவிஞர். மரபில் தொடங்கி நவீனக் கவியுலகில் தடம்பதித்த நா.காமராசன் படைத்த பெரியார் காவியம் இன்றும் மாணவர்களுக்குப் பாடநூல். மிகக் கூர்மையான சொல்லாடலும் தமிழ்மொழிமீதான பற்றும் அவர் படைப்புகளின் ஊற்றுக்கண். யாராலும் கண்டுகொள்ளப்படாத விளிம்புநிலை மாந்தர்கள் இவரின் பாட்டுடைத்தலைவர்கள். திருநங்கையர் குறித்து அப்போதே காகிதப் பூக்கள் என்று கறுப்புமலர்களில் பதிவுசெய்த படைப்பாளர் நா.காமராசன். “ காலமழைத் தூறலிலே களையாய்ப் பிறப்பெடுத்தோம்/ தாய்ப் பாலின் சரித்திரத்தில்/சதுராடும் புதிரானோம்/விதை வளர்த்த முள்ளானோம்/விளக்கின் இருளானோம் ” என்று கண்ணீர்வரப் பாடியவர் நா.காமராசன். கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராவும் வானம்பாடிக் கவிஞராகவும் ...