‘மேலும்’ இலக்கிய அமைப்பின் சார்பில் திருநெல்வேலியில் வண்ணதாசன் சிறுகதைகள் வாசிப்பு நிகழ்ச்சி


திருநெல்வேலியில் செயல்படும் ‘மேலும்’ இலக்கிய அமைப்பின் சார்பில் நடைபெறும் எழுத்தாளர் வண்ணதாசன் சிறுகதைகள் வாசிப்பு நிகழ்ச்சி குறித்து அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் ‘மேலும்’ சிவசு, மற்றும் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
திருநெல்வேலியில் மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் வண்ணதாசன்   சிறுகதைகளை வாசிக்கலாம் வாங்க எனும் பொருளிலான இலக்கிய நிகழ்ச்சி  22.8.2015 சனிக்கிழமை மாலை 5 முதல் 8 மணி வரை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் உள்ள கௌசானல் அரங்கில் நடைபெறும்.இந்த நிகழ்வில்  மேலும் ‘சிவசு,சௌந்தர மகாதேவன், நாறும்பூநாதன், நா.வேலம்மாள்,கண்ணையன் தட்சிணாமூர்த்தி,சி.ரமேஷ் ஆகியோர் வண்ணதாசன் எழுதிய சிறுகதைகள் குறித்து உரையாற்ற உள்ளனர்.

 இந்த விழாவில் எழுத்தாளர் வண்ணதாசன் சிறப்பு விருந்தினராய் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். கலந்துகொண்டு இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர், ‘மேலும்’சிவசு,9.ரயில்வே ஸ்டேசன் சாலை,பாளையங்கோட்டை- 627 002 எனும் முகவரிக்கோ அல்லது 9443717804 எனும் செல்பேசி எண்ணையோ தொடர்புகொள்ளலாம். கட்டணம் ஏதுமில்லை.
                       பேராசிரியர் சௌந்தர மகாதேவன்,
         செயலாளர்,     மேலும் இலக்கிய அமைப்பு,   திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை