குறியீடுகளின் படைப்புநாயகன் உம்பர்டோ ஈக்கோ : முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி

குறியீடுகளின் படைப்புநாயகன் உம்பர்டோ ஈக்கோ முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி உலகம் அதிசய அபூர்வக் குறியீடுகளின் இயங்குதளம், இயற்கை குறியீட்டுமொழியில் நமக்கு ஏதோவொரு செய்தியை உணர்த்திக்கொண்டே இருக்கிறது. ஆனால் நாம்தான் பொருள்புரியாமல் பொருளற்ற வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்று உம்பர்டோ ஈக்கோவை வாசித்தவர்களுக்குப் புரிந்திருக்கும். இத்தாலிய நாவலாசிரியர் உலகின் புகழ்பெற்ற குறியீட்டியல் அறிஞர் உம்பர்டோ ஈக்கோவின் “ ரோஜாவின் பெயர்” நாவலைத் தமிழ்வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி அவருக்கு தி இந்து கலைஞாயிறு இறுதிஅஞ்சலி செய்திருப்பது மனநிறைவை அளிக்கிறது. மொழியும் புவிசார் எல்லைகளுக்கும் அப்பால் இலக்கியத் தளத்தில் யாவரும் ஒன்றே என்று இந்து மற்றுமொருமுறை மெய்ப்பித்திருக்கிறது. நாவலுக்கான வடிவமும் நாவலுக்கான பழைய வரையறைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதை உம்பர்டோ ஈக்கோவின் படைப்பிலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்வதில் படைப்பின் சூட்சுமம் இல்லை,புதிர்போன்ற, விடுகதை போன்ற எதிர்பார்ப்பு மேடைகளில்தான் படைப்பிலக்கியம் உ...