பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் நூல் வெளியீட்டுவிழா




 பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையின் சார்பில் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அறக்கட்டளைச் சொற்பொழிவு 13.2.2016 சனிக்கிழமை காலை 11 மணிக்குக் கல்லூரி உரையரங்கில் நடைபெற்றது.

தமிழ்த்துறைத்தலைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி சொற்பொழிவைத் தொடங்கிவைத்து வரலாற்றறிஞர் செ.திவான் எழுதிய  “வள்ளலாரும் செய்குத்தம்பிப் பாவலரும்” எனும் நூலை வெளியிட திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் உ.அலிபாவா அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்திப்பேசினார். சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அறக்கட்டளைச் சொற்பொழிவில் “குணங்குடி மஸ்தான் சாகிப் அவர்களின் மெய்ஞ்ஞானப்பாடல்கள்” என்ற தலைப்பில் பேராசிரியர் உ.அலிபாவா சிறப்புரையாற்றினார். நூலாசிரியர் செ.திவான் ஏற்புரையாற்றினார்.

விழாவில் டெல்லியில் நடைபெற்ற குடியரசுதினவிழாவில் கலந்துகொண்டு தேசிய சாதனை புரிந்துள்ள தேசியமாணவர் படை மாணவர் ராஜாசின்னதுரைக்குக் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ்  த.இ.செ.பத்ஹூர் ரப்பானி பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார். தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் அ.மு.அயூப்கான் நன்றியுரையாற்றினார்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை