பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவனுக்குத் தமிழ்மாமணி விருது
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்ப்
பேராசிரியருக்கு கவிதைஉறவு அமைப்பின்
சார்பில் தமிழ்மாமணி 18.5.2016 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது
கவிதைஉறவு இலக்கிய அமைப்பின் தமிழ்மாமணி விருது
.................................................................................................................................
பாரதப்பிரதமரின் சத்பவனா தேசியகட்டுரையாளர்
விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித்
தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவனின் தமிழ்இலக்கியப் பணிகளைப் பாராட்டி
சென்னையில் நடைபெற்ற விழாவில் கவிதைஉறவு தமிழ்இலக்கிய அமைப்பின் சார்பில்
“தமிழ்மாமணி விருது” வழங்கப்பட்டது.

கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் தலைமையில்
சென்னையில் இயங்கிவரும் கவிதைஉறவு தமிழ்இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும்
தமிழ்க் கவிதை, படைப்பிலக்கியம், இளையோர் மேம்பாடு, ஊடகம், குழந்தைஇலக்கியம்,
மனிதநேயம் போன்றவற்றில் சிறந்துவிளங்கும் சாதனையாளர்களுக்கு விருதுகள்
வழங்கப்படுகின்றன.
தமிழ்இலக்கியத் துறையில்
சிறந்துவிளங்குவோருக்குத் தமிழ்மாமணி விருது வழங்கப்படுகிறது. சென்னை
தியாகராஜநகரில் உள்ள வாணிமகால் மண்டபத்தில் மே- 18 அன்று மாலை 6 மணிக்கு தேசியமணி
இல.கணேசன் தலைமையில் நடைபெற்ற விருதுவழங்கும் விழாவில் தொழிலதிபர் நல்லி
குப்புசாமி செட்டி, ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் டாக்டர் ஜே.சதக்கத்துல்லா,
ஏர்வாடி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன், தாமோதர கண்ணன் ஆகியோருக்கு
தமிழ்மாமணி விருதையும், ரவி தமிழ்வாணனுக்குப் பதிப்புச் செல்வர் விருதையும்,
கார்முகிலோனுக்கு கலைமாமணி விக்கிரமன் விருதையும், மாம்பலம் சந்திரசேகருக்கு
மனிதநேயச் செல்வர் விருதையும், இலக்கிய வீதி இனியவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும்
வழங்கிப் பாராட்டினர். சிறந்த நூல்களைப் படைத்த முப்பது நூலாசிரியர்கள் விழாவில்
பாராட்டப்பட்டனர்.
காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா ஜெயந்திவிழா சாதனையாளர்
விருது
..........................................................................................................................................

காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா ஜெயந்திவிழாவை
முன்னிட்டு சென்னை கிழக்கு தாம்பரம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மே-
18 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற விருதுவழங்கும் விழாவில் பேராசிரியர் சௌந்தர
மகாதேவனின் கலைஇலக்கியப் பணிகளைப் பாராட்டி
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி
சுவாமிகள், காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா ஜெயந்திவிழா சாதனையாளர் விருதினை அவருக்கு
வழங்கிப் பாராட்டியுள்ளார்கள்.

பெற்றவிருதுகள்
...................................
இணையத்தமிழ்த் துறையில் குறிப்பிடத்தக்கப்
பங்களிப்பைச் செய்துவரும் பேராசிரியர் ச.மகாதேவனின் இருநூல்கள் மலேயாப்
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டன.
இளையோர் மேம்பாட்டுத் தன்னம்பிகைக் கட்டுரைகளைத் தமிழ் இதழ்களில் தொடர்ந்து
எழுதிவரும் இவர், தமிழகக் கல்லூரிகளில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை
நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்திவருகிறார். தமிழ்இலக்கிய ஆளுமைகள் குறித்த
இலக்கியத் தொடர்களை எழுதிவருகிறார்.
முகநூலில் சமூகம் தொடர்பான புதுக்கவிதைகளைத்
தொடர்ந்து எழுதிவருகிறார். இவர் எழுதி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் மலேசியா நாட்டின் மலேயாப் பல்கலைக்கழகமும்
சென்னை கலைஞன் பதிப்பகமும் இணைந்து ஒரேநாளில் 390 நூல்களை வெளியிட்ட கின்னஸ் சாதனை
நிகழ்ச்சியில் பேராசிரியர் ச.மகாதேவன்
எழுதிய வண்ணதாசன் எனும் நூல்வெளியிடப்பட்டது.
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில்
இவரது நூல்கள் பாடமாய் உள்ளன. இருபது தமிழ் நூல்களை இவர் பதிப்பித்துள்ளார். இந்தியாவைப்
பற்றி சுவாமி விவேகாநந்தரின் சிந்தனைகள் எனும் தலைப்பில் கட்டுரைக்காக அப்போதைய
பாரதப் பிரதமர் பி.வி.நரசிம்மராவிடம் புதுடெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற
விழாவில் தேசிய விருதையும் சத்பவனா தேசியகட்டுரையாளர் விருதினைப் பெற்றுள்ளார்.
தஞ்சையில்
தமிழக அரசுநடத்திய எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் தமிழக முதல்வரின் தங்கப்பதக்கம்
பெற்றுள்ளார். மது,போதை மருந்துகளுக்கு
எதிரான விழிப்புணர்வுக் கட்டுரைக்காகத் தமிழக ஆளுநர் சென்னாரெட்டியிடம்
தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இளையோர் மேம்பாட்டுப்பணிகளுக்காக சென்னை அரிமா
சங்கத்தின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினைப் பெற்றுள்ளார். திருமதி
லதா ரஜினிகாந்த் எழுதிய “அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்” எனும் நூலைத் திறனாய்வு செய்தமைக்காக சென்னை
நூற்றாண்டுவிழா அரங்கில் நடைபெற்ற விழாவில் திரு.ரஜினிகாந்த் அவர்களிடம் விருது
பெற்றுள்ளார். தமிழகக் கல்லூரி மாணவர்களிடம் திரு.கமல்ஹாசன் நடத்திய “ மெல்லத்
தமிழ் இனி..” எனும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற எட்டாயிரம் மாணவர்களில்
மாநிலமுதலிடம் பெற்று கமல்ஹாசனிடம் விருது பெற்றார்.
சென்னை கம்பன் கழகம் நடத்திய
சீறாப்புராணக் கட்டுரைப் போட்டியில் மாநிலமுதலிடம் பெற்று முன்னாள் நீதியரசர்
மு.மு இஸ்மாயில் அவர்களிடமும் ஜி.கே.மூப்பானார் ஆகியோரிடம் கம்பன் கழகவிருதுகளைப்
பெற்றுள்ளார். இத்தகைய பல விருதுகளை இளம்வயதில் வென்ற பேராசிரியர் ச.மகாதேவனுக்கு
சென்னையில் உள்ள கவிதை உறவு தமிழ்இலக்கிய அமைப்பு தமிழ்மாமணி விருதை
வழங்கியுள்ளது.
படத்தில்:
சென்னையில் நடைபெற்ற கவிதைஉறவு தமிழ் இலக்கிய
அமைப்பின் விருதுவழங்கும் விழாவில் பாளை.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவனின்
தமிழ்இலக்கியப் பணிகளைப் பாராட்டி தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி “தமிழ்மாமணி
விருது” வழங்கிப்பாராட்டுகிறார். அருகில் இல.கணேசன், மற்றும் கலைமாமணி ஏர்வாடி
ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
Comments
Post a Comment