சௌந்தர மகாதேவன் கவிதை



மௌனத்தின் பொருள்
பொறுத்தல் என்பதில்லை
பேரிடியாய் பெருமழையாய் சிலகணங்கள்
ஏற்கஇயலா இயலாமையோடு
சிலகணங்களில் சீறும்
சினவார்த்தைகள் கூறும்.
உயிரற்ற சடங்களோடு
அமர்க்களமாய் தெரியும் சிலகணங்களில்.
குத்திக்கிழிக்கிற கத்தியாகிறது
சில நாட்களில் நாவுகளும்
அவை தரும் நோவுகளும்.
முள்வேலியிட்ட முகப்பரப்பில் சிலகணங்களில்
தேளும்வேலியிடுகிறது விடக்கொடுக்கால்.
வன்பிரளயங்களைப் பின்பற்றி நடக்கின்றன
அத்தனை வார்த்தைக் கால்களும்.

சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை