முனைவர் ச.மகாதேவன் கவிதை



புறப்படுகிறோம்
புரிதல்கள் ஏதுமின்றி
முன்பு புறப்பட்ட
இடம் நோக்கியே..
கிழித்தெறிகிறோம்
காலண்டர்தாள்களைக்
கிழமையென நினைத்து
காலம் காலையிலேயே
காலமாவதை அறியாமல்..
அச்சுமுறிக்கிறார்கள்
அச்சு வெல்லப்பேச்சால்
அத்தனை அரங்குகளிலும்
மயக்க மருந்து கொடுத்து
மரணத்திற்குக் கொண்டுசெல்கிறமாதிரி
அலைகிறது அலை
கடலின் காலக்கவலைகளோடு
காலகாலமாய்..
இப்படிக் காலம்பற்றிக்
காலையிலே கவிதை சொல்லும்
என்னை நீ வெறித்துப்பார்க்கிறாய்
வேறுயாரையோ பார்ப்பதைப்போல்..
விரித்துப் பார்க்கவியலா
வியப்புக்களோடு விழிமூடிக்கிடக்கிறது
இந்த விந்தை வாழ்க்கை
இப்போதும் இமைதிறவா இயற்கை
இறந்துவிட்டதை அறிவிக்கிறார்கள்
பக்கத்தில் பாசக்காரப்பிள்ளைகள்
பாவம் பாடைதூக்க..
சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை