சிறை ...........சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி



தொட்டிமீன்களைப்பார்ப்பதில்
அவருக்கு அப்படி ஒருமகிழ்ச்சி.
அலையும் இல்லாத குட்டிக்கடலில்
அலையும் அதன் கலையைப் பார்ப்பதை
அவர் தியானமென்று சொல்லியிருக்கிறார்
ஒருவருமற்ற ஒரு தனிமைப்பொழுதில்.
தொட்டிக்குள் வாழ்ந்தாலும் துயரமேதுமற்று
இயங்கிக்கொண்டேயிருக்கும்
அதன் இனிமையைப்பார் என்றார்
பிறிதொருநாளில்.
என் கவனம்
 அதன் இயக்கம் பற்றியோ
பொன்நிறமேனி பற்றியோ அல்லாமல்
அதன் கண்ணாடிச்சிறை
குறித்தே என் கவலை அமைந்தது.



Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

தமிழ்மொழி என்னும் விழி உலகதாய்மொழிதினக் கட்டுரை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை