நாவறியா நிகழ்வுகள் ...சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.



மின்சாரமற்றுப்போன நள்ளிரவில்

தீப்பெட்டிதேடப்போய் தெரியாமல்

சுவரில் முட்டிக்கொள்வதைப்போல

பேசிமுடித்தபின் நாக்கடித்துக்கொள்கிறேன்

பின்னணி தெரியாமல் இயல்பாகப் பேசிவிட்ட

சில வாக்கியங்களுக்காக.

குழந்தை குறித்துக் கேட்டதும்

சாலைக்குமாரசுவாமி கோவில் வாசலில்

கதறிஅழுத அந்தச் சகோதரி முகம்

இன்னும் கண்ணீரோடு கண்களில்..

இப்போதெல்லாம்

பெருஞ்சொற்கள் அடுக்கிப்பேசுவதைவிடச்

சிறுபுன்னகையோடு நிறுத்திக்கொள்கிறேன்.

நாவுக்குத் தெரியுமா முந்தைய வினாடியில்

 நடந்த முன்சோக நிகழ்வுகளின் கொடுங்கதைகள்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

தமிழ் இலக்கியப் பதிவுகளில் திருச்செந்தூர் முருகன் * சௌந்தர மகாதேவன்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தன்னம்பிக்கைக் கட்டுரை - தினமலர் என் பார்வை