திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இளைஞர் எழுச்சிதினப் போட்டிகள்
தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் டாக்டர்
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள் இளைஞர் எழுச்சிநாள் கொண்டாட்டமாக அனைத்துக்
கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி
பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடத்தப்பட்டது.
தமிழக உயர்கல்வித்துறையின் சார்பில் பாரதரத்னா
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள் அக்டோபர் -15 அன்று இளைஞர்
எழுச்சிநாளாகக் கொண்டாடப்படுகிறது. திருநெல்வேலி மண்டலம் முழுக்க உள்ள அரசு
உதவிபெறும்,சுயநிதிக் கல்லூரிகள்,கல்வியியல் கல்லூரிகளில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்
கலாம் பிறந்தநாள் இளைஞர் எழுச்சிநாள் கட்டுரை,பேச்சுப் போட்டிகளைச் சிறப்பாக
நடத்தவும் நாட்டு நலப்பணித்திட்டத் தொண்டர்களை ஒருங்கிணைத்து இளைஞர் எழுச்சிநாள்
பேரணிகளை நடத்தவும் திருநெல்வேலி மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் ஆணை
பிறப்பித்துள்ளார்.
இளைஞர் எழுச்சிநாள் போட்டிகள்
ஒவ்வொரு கலை அறிவியல் கல்லூரியிலும் அக்டோபர்
-12 காலை 11 மணிக்கு இளைஞர் எழுச்சிநாள் முதல் சுற்றுப்போட்டிகளாக பேச்சு,கட்டுரைப்
போட்டிகள் நடத்தப்பட்டது.
பேச்சுப்போட்டியின் தலைப்புகளாக
1.அறிவியல் முன்னேற்றத்தில் பாரத ரத்னா டாக்டர்
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ( Bhart Ratna Dr.A.P.J.Abdul Kalam Towards Scientific
Development )
2. அறிவியல் சிந்தனை உருவாக்கத்தில் இளைஞர்களின்
பங்கு ( Role Of Youth Building Scientific Temper)
3.ஏவுகணை நாயகன் பாரத ரத்னா டாக்டர்
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (Bhart Ratna Dr.A.P.J.Abdul Kalam – Missile Architect)
4. இந்தியாவை வல்லரசாக்குவதில் அறிவியல் ( Science For Making India – A Super
Power)
5. புதியன படைத்தலின் கனவு ( Envision and
Innovate)
6. அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்கள்
(Contribution to Science by Indians)
கட்டுரைப்போட்டியின் தலைப்புகளாக
7. இந்திய விண்வெளிப் பயணம் ( Indian Space
Journey )
8. அன்றாட வாழ்வில் அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத்தின் பயன்பாடு ( Use Of Science and Technology in Daily Life)
9. மனித நலனில் அறிவியல் (Science For Human
Welfare)
10. மாணவர்களை ஊக்குவித்தலில் பாரத ரத்னா
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பங்கு (Role Of Bhart Ratna Dr.A.P.J.Abdul Kalam
in Motivating Students Scientific Temper )
11. அறிவியலும் சுற்றுச் சூழலும் (Science and
Environment )
12. மேம்பட்ட உடல்நலத்திற்கு அறிவியல் (Science
for Better health)
இரண்டாம் சுற்றுப்போட்டிகள்
ஒவ்வொரு கல்லூரியிலும் வெற்றிபெற்று முதலிடம்
பெறும் மாணவ மாணவியர் மாவட்ட அளவில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரியில் 13.10.2015 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற
இரண்டாம் சுற்றுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித்
தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சௌ.மகாதேவன்
பணிபுரிந்தார். போட்டியின் நடுவர்களாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள்
சேக்சிந்தா, அனுசியா, மாலிக், சாதிக் அலி, குமார் செயல்பட்டனர்.
தொடக்க விழா
மாவட்ட அளவிலான போட்டிகளின் தொடக்கவிழா கல்லூரி
உரையரங்கில் நடைபெற்றது. தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சௌ.மகாதேவன் வரவேற்றுப்
பேசினார். போட்டிகளை திருநெல்வேலி மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் முனைவர்
ரெ.பாண்டியன் தலைமையேற்றுத் தொடங்கிவைத்தார்.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்திப் பேசினார்.தமிழ்த்துறை இணைப்
பேராசிரியர் அ.மு.அயூப்கான் நன்றி கூறினார்.
போட்டிமுடிவுகளை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்
சௌ.மகாதேவன் போட்டிமுடிவுகளைத் தெரிவித்துப் பேசினார்.
கட்டுரைப் போட்டியில் சாராள் தக்கர் கல்லூரி
மாணவி மாவட்ட முதலிடம்
கட்டுரைப்போட்டியில் திருநெல்வேலி சாராள் தக்கர்
கல்லூரி மாணவி நா. பாலாமணி முதல்பரிசினையும், தூய இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி
மாணவி மு.எஸ்தர் ஷைனி பிரியா இரண்டாம் பரிசினையும், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
மாணவி எஸ்.டி.ஜெபா மூன்றாம் பரிசினையும் வென்றனர்.
பேச்சுப்போட்டியில் சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரி மாணவர் மாவட்ட முதலிடம்
பேச்சுப் போட்டியில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்
ம.கலையரசன் முதல்பரிசினையும், சாராள் தக்கர் கல்லூரி மாணவி ம.பௌஷி இரண்டாம்
பரிசினையும், தூய இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி மாணவி வி.பிரசில்லா மூன்றாம்
பரிசினையும் பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
தமிழ்த்துறை சிறப்பாகச் செய்திருந்தது.
முனைவர்
சௌ.மகாதேவன்,
போட்டி ஒருங்கிணைப்பாளர் &
தமிழ்த்துறைத்தலைவர்
Comments
Post a Comment