திருநெல்வேலியில் நூல்கள் வெளியீட்டு விழா
மனதிற்கு நிறைவளித்த நிமிடங்கள் ரோஜாக்கள் மிக அழகாக இருக்கின்றன, ஏனெனில் அவை ஒருபோதும் தாமரைகளாக மாறமுயல்வதில்லை ஓஷோ சொன்னதாக இன்று காலையில் முகநூலில் படித்தேன். நாம் யாரைப்போலவோ மாறநினைத்து இறுதியில் நம் முகத்தையும் நம் அகத்தையும் தொலைத்து வாழத்தொடங்கிவிட்டோம். குழந்தைகள் நூலகம் இல்லை, குழந்தைகளுக்குக் கதை சொல்ல நாம் தயார் இல்லை. குழந்தைகள் பத்திரிகை குறித்து நமக்குக் கவனம் இல்லை. குழந்தைகள் கனவுகுறித்து நமக்குக் கவலை இல்லை. குழந்தைகள் குறித்து திருமதி லதா ரஜினிகாந்த் ஆனந்த விகடனில் “அவர்கள் சின்னஞ்சிறுமனிதர்கள்” எனும் தொடர் எழுதினார்கள். கல்லூரியில் பயின்றபோது அதற்கு 75 பக்க அளவில் விமர்சனம் எழுதி அனுப்பிவைத்தேன். 1998 ஆம் ஆண்டு சென்னை நூற்றாண்டுவிழா அரங்கில் நடைபெற்ற தி-ஆஸ்ரம் பள்ளிவிழாவில் அதை நூலாக அவர் வெளியிட்டார். கல்லூரி மாணவனான என்னை அப்போது திருமதி.லதா ரஜினிகாந்த் அவர்கள் சிறப்புவிருந்தினராய் அழைத்திருந்தார்கள். சமீபத்தில் மறைந்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் அந்த நூலை வெளியிடவந்திருந்தார்கள். திரு.ரஜினிகாந்த் அ...