தமிழறிஞர்கள் -பேராசிரியர் (சவுந்தர) மகாதேவன் : பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்

தமிழறிஞர்கள் (86) ...

பேராசிரியர் (சவுந்தர) மகாதேவன் ( 1974) ...நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பன்முகத் திறனுடைய ஒரு இளம் தமிழாய்வாளர். எழுத்தாளராக ... கவிஞராக ... பேச்சாளராக ... ஆய்வாளராக ... பேராசிரியராகத் திகழ்கிறார். 
 
பாளை தூய சவேரியார் கல்லூரியில் தமிழில் முதுகலை, எம் ஃபில் பட்டங்களைப் பெற்ற இவர், நெல்லை மதிதா இந்துக்கல்லூரியில் பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் வழிகாட்டுதலில் 'வண்ணதாசன் படைப்பிலக்கியங்கள் ' பற்றி ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 
 
தனது 20 வயதில் இவர் பாரதப் பிரதமரின் 'சத்பவனா தேசியக் கட்டுரையாளர் விருதையும்', இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் ' தேசிய அங்கீகரிப்புச் சான்றிதழையும் ரூ. 10,000 முதல் பரிசினையும்' பெற்றவர். 21 ஆவது வயதில் தஞ்சையில் நடைபெற்ற 8 ஆம் உலகத்தமிழ்மகாநாட்டின்போது நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் 'புதுக்கவிதைகளில் சமுதாயநோக்கு' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டிக்குக் கட்டுரை எழுதி, மாநிலத்திலேயே முதலிடம் பெற்று, தமிழக முதல்வரின் தங்கப் பதக்கத்தை வென்றார்.

 கட்டுரைப் போட்டி மட்டுமல்லாமல், கவிதைப்போட்டி, ஆய்வுக்கட்டுரைப்போட்டி ஆகியவற்றிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 

இவைபோன்று பல விருதுகளைப் பெற்ற இவர், 'இணையத்தமிழ்', மகாபாரதி இணையக்கவிதைகள்', 'தேமதுரத்தமிழ்' 'பொய்கையாழ்வார்', 'பூதத்தாழ்வார்', 'வண்ணதாசன்' ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். 
 
ஊடகத் துறையில் இளம் வயதிலிருந்தே பெரும்பங்காற்றிவருகிறார். 
குறிப்பாக, இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏராளமான கட்டுரைகளைத் 'தினமலர்' இதழில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிலும் தொடர்ந்து தனது பங்களிப்பை அளித்துவருகிறார். தமிழ் இணையக்கல்விக்கழகத்திற்காக ஏராளமான மின்னூல்களையும் கல்லூரித்தமிழ்ப் பாடத்திட்டக்குழுவின் சார்பாக ஆறு நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் உதவிபெற்று, வண்ணதாசனின் படைப்பிலக்கியங்களில் இயற்கைபற்றி ஒரு குறு ஆய்வுத்திட்டத்தைச் செய்துமுடித்துள்ளார். வலைப்பூக்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றில் தொடர்ந்து தனது பங்களிப்பைச் செம்மையாகச் செய்துவருகிறார். 

நெல்லையில் பேராசிரியர்கள் சிவசு, கட்டளை கைலாசம் ஆகியோருடன் இணைந்து பல்வேறு இலக்கியக் கூட்டங்களை நடத்திவருகிறார். 

http://namipikai.blogspot.in/ என்ற வலைப்பூவில் தொடர்ந்து தரமான கட்டுரைகளை அளித்துவருகிறார். இளம் ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த 41 வயது இளைஞர் செயல்பட்டுவருகிறார்.

 கடந்த சில மாதங்களாக இவரது தொடர்பு எனக்கு கிடைத்துவருகிறது. தற்போது இவர் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார்

மின்னஞ்சல் :mahabarathi1974@gmail.com


நன்றி.: பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களின் முகநூல் பக்கம்














Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானி : பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

இளையோர் தன்னம்பிக்கைக் கட்டுரை ;பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,