பொழுதுபோக்கு ஊடகமான முகநூல் , சமூகத்தைப் பழுதுபார்க்கும் ஊடகமாக மாறிவருவதை அரவிந்தனின் ‘ விவாத மரபு மீண்டு வருமா ?’ கட்டுரை அழகாக உணர்த்தியது. முகநூல் பக்கங்களில் இப்போது பிரமிள் , சுந்தரராமசாமி , நகுலன் , ந.பிச்சமூர்த்தி , லா.ச.ரா. , புதுமைப்பித்தன் , மௌனி , ஜி.நாகராஜன் போன்ற இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் , அவர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதேநேரத்தில் , சி.சு.செல்லப்பா , க.நா.சு , வெங்கட்சாமிநாதன் , தி.க.சி. போன்றோர் முன்னெடுத்த தரமான , திறமான இலக்கியப் படைப்பை மையமிட்ட விமர்சனப் பார்வை , இன்று குறுகிய வட்டத்தில் செயல்படும் குழு அரசியலாகவும் , தனி மனிதத் துதிபாடல் அல்லது தனிமனித அவதூறாக மாறிப்போகிறது. இணையவாசிகள் தரமான விவாத மரபை நோக்கி நகர்ந்தால் மகிழலாம். - சௌந்தர மகாதேவன் , திருநெல்வேலி.