பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் “தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்” தேசியக் கருத்தரங்கு தன்னம்பிக்கைத் தமிழ் ஆய்வுக்கோவை வெளியீடு



                       தமிழால் எல்லாம் முடியும்





                     பா. தேவேந்திர பூபதி சிறப்புரை


      பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை சார்பில்தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்எனும் தேசியக்கருத்தரங்கு 27.09.2016 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.
      கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த..செ.பத்ஹூர் ரப்பானி கருத்தரங்கிற்குத் தலைமையேற்று கருத்தரங்க ஆய்வுக்கோவையானதன்னம்பிக்கைத் தமிழ் எனும் ஆய்வுநூல்களின் மூன்றுதொகுதிகளை  வெளியிட்டுத் தலைமையுரையாற்றினார். கவிஞரும் வணிகவரித்துறை இணை ஆணையாளருமான பா. தேவேந்திர பூபதி அவர்கள் அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டு கருத்தரங்கச் சிறப்புரையாற்றினார்.
தமிழால் எல்லாம் முடியும்
அவர் தமது சிறப்புரையில் “ எல்லாம் தமிழால் முடியும் என்ற எண்ணம் தமிழ் பயிலக்கூடிய மாணவர்களிடையே உருவாகியிருக்கிறது. அரசுதவி பெறாப் பாடப்பிரிவிலும் ஆர்வமாக தமிழ்பயிலத்தொடங்கியிருக்கிறார்கள் என்பது தமிழ் வளர்ச்சிக்கு நல்ல அடையாளமாகக் கொள்ளமுடிகிறது. தமிழை அடுத்ததலைமுறை மாணவர்களிடம் கொண்டுசெல்லக்கூடிய உயரிய பணியினை இக்கல்லூரித் தமிழ்த்துறை சிறப்பாகச் செய்துவருகிறது.முத்தமிழ் என்று இருந்த நிலையை மாற்றி தன்னம்பிக்கைத் தமிழ் என்கிற புதியவகைமையை இக்கல்லூரித் தமிழ்த்துறை முன்னெடுத்திருக்கிறது. தமிழ் இலக்கியம் தன்னம்பிக்கையை வளர்கிறது. திருக்குறளும், பாரதியின் ஆத்திசூடியும், தேவாரமும், சீறாப்புராணமும் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்கிற சிந்தனையை நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. உலகின் உயரிய இலக்கியக்கோட்பாடுகள் தோன்றும் முன்னரே தமிழ் அதைத் தெளிவாக விளக்கி இருக்கிறது. தமிழ் மொழி என்பதையும் தாண்டி உலகத் தமிழர்களுக்கு இன்று அடையாளமாய் மாறியிருக்கிறது.   நவீனக்கவிதைகளின் வேராகத் தமிழின் தொன்மையான சங்கஇலக்கியம் திகழ்கிறது. தமிழ் வழியில் பயின்றால் சுயசிந்தனையை ஊற்றெடுக்க வைத்து அறிஞனாக மாற்றுகிறது.சதாவதானி செய்குதம்பிபாவலர் ஒரேநேரத்தில் நூறு அவதானங்களைச் செய்து தன்னம்பிக்கையின் அடையாளமாய் தமிழை மாற்றினார்.தமிழ் பயின்ற தமிழரால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு அவரே சான்றாகத் திகழ்ந்தார்.” என்று பேசினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் மு.முஹம்மது சாதிக் வாழ்த்துரை வழங்கினார்கள்.
      ஆட்சிக்குழுப் பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம்.சேக் அப்துல்காதர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே..மீரான் முஹைதீன் அல்ஹாஜ் எம்.கே.எம். முகமது நாசர் பொறியாளர் எல்.கே.எம்..முஹம்மது நவாப் ஹுசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
      முதல் அமர்வில் இணைப் பேராசிரியர் அ.மு. அயூப் கான் அவர்கள் அறிமுகவுரையாற்றினார். நிகழ்ச்சியில்மனதில் உறுதி வேண்டும்என்ற தலைப்பில் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் மு.அப்துல்சமது முதல் அமர்வில் சிறப்புரையாற்றினார். கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் அ. சேக் சிந்தா நன்றியுரை ஆற்றினார்.
      இரண்டாம் அமர்வில் அரசுதவிபெறாப் பாடப்பிரிவுகளின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆர். அனுசுயா அறிமுகவுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநலத்துறைப் பேராசிரியர் டாக்டர் ஜி.ராமானுஜம்மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் எம். சாதிக் அலி தொகுப்புரை வழங்கினார்.
      மூன்றாம் அமர்வில் உதவிப் பேராசிரியர் ஜெ. குமார் அறிமுகவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் நெல்லை கவிநேசன்வையத் தலைமை கொள்என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். உதவிப் பேராசிரியர் வி. மாலிக் தொகுப்புரை வழங்கினார்.
      நான்காம் அமர்வில் உதவிப் பேராசிரியை இரா. விஜயலெட்சுமி அறிமுகவுரையாற்றினார். நிகழ்ச்சியில் வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ப.சிவராஜிநினைவு நல்லது வேண்டும்என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
      கல்லூரி முதல்வர் முனைவர் மு.முஹம்மது சாதிக் கல்லூரியின் அரசுதவி பெறாப்பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ.அப்துல் காதர் ஆகியோர் நிறைவு விழாவில் பங்கேற்று ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.
      நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக உதவிப் பேராசிரியர் முனைவர் நா. ஜிதேந்திரன் நன்றியுரை வழங்கினார்.
படத்தில்: கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த..செ.பத்ஹூர் ரப்பானி கருத்தரங்கிற்குத் தலைமையேற்று கருத்தரங்க ஆய்வுக்கோவையானதன்னம்பிக்கைத் தமிழ் எனும் ஆய்வுநூல்களின் மூன்றுதொகுதிகளை  வெளியிடக் கவிஞரும் வணிகவரித்துறை இணை ஆணையாளருமான பா. தேவேந்திர பூபதி அவர்கள் அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்.


Comments

Popular posts from this blog

ஆசிரியர்களைப் போற்றுவோம்: தினமலர் என் பார்வை பேராசிரியர் சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி

ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானி : பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி

இளையோர் தன்னம்பிக்கைக் கட்டுரை ;பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,