மகிழும் வழி செய்வீரா? : தி இந்து இப்படிக்கு இவர்கள் சௌந்தர மகாதேவன்
பொழுதுபோக்கு ஊடகமான
முகநூல், சமூகத்தைப்
பழுதுபார்க்கும் ஊடகமாக மாறிவருவதை அரவிந்தனின் ‘விவாத மரபு மீண்டு வருமா?’ கட்டுரை அழகாக உணர்த்தியது.
முகநூல் பக்கங்களில்
இப்போது பிரமிள், சுந்தரராமசாமி,
நகுலன், ந.பிச்சமூர்த்தி, லா.ச.ரா., புதுமைப்பித்தன், மௌனி, ஜி.நாகராஜன் போன்ற
இலக்கிய ஆளுமைகளின்
பெயர்கள், அவர்களின்
படைப்புகள் குறித்த விமர்சனங்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது.
அதேநேரத்தில்,
சி.சு.செல்லப்பா,
க.நா.சு, வெங்கட்சாமிநாதன், தி.க.சி. போன்றோர் முன்னெடுத்த தரமான, திறமான இலக்கியப் படைப்பை மையமிட்ட
விமர்சனப் பார்வை,
இன்று குறுகிய
வட்டத்தில் செயல்படும் குழு அரசியலாகவும், தனி மனிதத் துதிபாடல் அல்லது தனிமனித
அவதூறாக மாறிப்போகிறது. இணையவாசிகள் தரமான விவாத மரபை நோக்கி நகர்ந்தால் மகிழலாம்.
- சௌந்தர
மகாதேவன், திருநெல்வேலி.
Comments
Post a Comment