பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் “தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்” தேசியக் கருத்தரங்கு
தன்னம்பிக்கைத் தமிழ் ஆய்வுக்கோவை வெளியீடு
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித்
தமிழ்த்துறை சார்பில் “தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்” எனும்
தேசியக்கருத்தரங்கு 27.9.2016 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறஉள்ளது.
கல்லூரித்
தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி கருத்தரங்கிற்குத் தலைமையேற்று கருத்தரங்க
ஆய்வுக்கோவையான “தன்னம்பிக்கைத் தமிழ்” எனும் நூலை வெளியிட்டுத் தலைமையுரையாற்ற
கவிஞரும் வணிகவரித்துறை இணைஆணையாளருமான
பா.தேவேந்திர பூபதி அதன் முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டு கருத்தரங்கச்
சிறப்புரையாற்றுகிறார்.
கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்துரை
வழங்குகிறார்.
ஆட்சிக்குழுத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. பல்லாக்
லெப்பை, ஆட்சிக்குழுப்பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம்.சேக் அப்துல்காதர்,ஆட்சிக்குழு
உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ.மீரான் முஹைதீன், அல்ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர்
ரஹ்மான், அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர்,பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முஹம்மது
நவாப்ஹுசேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
“மனதில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பில் உத்தமபாளையம்
ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் மு.அப்துல்சமது முதல்
அமர்வில் சிறப்புரையாற்றுகிறார். இரண்டாம் அமர்வில் திருநெல்வேலி மருத்துவக்
கல்லூரி மருத்துவக் கல்லூரி மனநலத்துறைப் பேராசிரியர் டாக்டர் ஜி.ராமானுஜம் “
மனநலம் மன்னுயிர்க் காக்கம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
மூன்றாம்
அமர்வில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிகநிர்வாகவியல் துறைத்தலைவர் நெல்லை
கவிநேசன் “ வையத் தலைமை கொள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
நான்காம்
அமர்வில் வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர்
ப.சிவராஜி “ நினைவு நல்லது வேண்டும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
கல்லூரி
முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக்,கல்லூரி அரசுதவி பெறாப்பாடங்களின் இயக்குநர்
முனைவர் ஏ.அப்துல்காதர் ஆகியோர் நிறைவுவிழாவில் பங்கேற்று ஆய்வாளர்களுக்குச்
சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டுகிறார்கள்.
Comments
Post a Comment